பாதாம் பேசன் லட்டு
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
பாதாம் - 10 - 15
பொடித்த சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 1/2 அல்லது 3/4 கப்
முந்திரி, பாதாம் (விரும்பினால்) - சிறிது
செய்முறை:
பாதாமை மிக்ஸியில் பொடியாக்கவும்.
கடாயில் நெய் விட்டு கடலை மாவு சேர்த்து கை விடாமல் வாசம் வர கிளறவும்.
இந்தமாவை தட்டில் கொட்டி, இத்துடன் ஏலக்காய் தூள், பொடித்த சர்க்கரை மற்றும் பொடித்த பாதாம் சேர்த்து கிளறவும்.
கலவை நன்றாக கலந்ததும் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சிறிது சேர்த்து கலந்து சின்ன சின்ன லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.