பாதாம் பூரி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

பாதாம் பருப்பு - 1/2 கப்

சர்க்கரை - 1 கப்

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

நெய் - 2 டீ தேக்கரண்டி

ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி

குங்குமப்பூ - சிறிதளவு

பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

செய்முறை:

1.பாதாம் பருப்பை வென்னீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.நன்றாக ஊறியவுடன் மிக்ஸியில் பொட்டு நைஸாக அரைத்துஎடுத்து மைதா மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி ஊறவிடவும்.

2.அரிசி மாவுடன் நெய் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து வைக்கவும்.

3. பிசைந்து வைத பாதாம் மாவை எடுத்து 8 உருண்டைகள் பூரி போல் உருட்டி நான்கு நான்கு பூரிகளாக இடவும்.ஒரு பூரியை வைத்து அதன்மேல் அரிசி மாவு பேஸ்டை தடவிஅதன் மேல் இன்னொரு பூரியை வைத்து திரும்ப அரிசி மாவு பேஸ்டை தடவி மீண்டும் இன்னொரு பூரியை வைத்து பூரிபோல் கொஞ்ஞம் கனமாக இடவும்.

4.அடுப்பில் வாணலியில் எண்ணெயை காயவைத்து பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

5. இரண்டு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து கம்பி பாகு காய்ச்சி இறக்கி வைக்கவும்.

பாகில் ஏலக்காய் குங்குமப்பூ சேர்க்கவும்.

பொரித்த பூரிகளை பாகில் போடு முக்கி எடுத்து ஆற விடவும்.

குறிப்புகள்: