பாதாம் அல்வா (4)
0
தேவையான பொருட்கள்:
நெய் - 100 மில்லி
பாதாம் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
சீனி - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
முந்திரிப்பருப்பு - 15
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
செய்முறை:
பாதாம் பருப்பை சூடான தண்ணீரில் ஊற வைத்து தோலுரித்து வைக்கவும். அதை அரைக்கவும்
ஒரு அடிக்கனமான வாணலியை அடுப்பில் வைத்து பால் ஊற்றி, கொதிக்க விடவும். கேசரி பவுடரை கரைத்து, அதில் அரைத்த பாதாம் மற்றும் சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்து கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.