பாதாம் அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாதாம் - 1/4 கிலோ

பால் - 1 கப்

நெய் - 4 மேசைக்கரண்டி

சர்க்கரை - 250 கிராம்

ஏலக்காய் - 3

ஆரஞ் கலர் - சிறிது

உப்பு - ஒரு கிள்ளு

செய்முறை:

பாதாமை ஊற வைத்தோ அல்லது அவனில் 10 நிமிடம் கொதிக்க வைத்தோ தோலுரித்து எடுத்து கொள்ளவும்.

பாதாமை மிக்சியில் போட்டு பாதாம் மூழ்கும் வரை பால் ஊற்றி மிகவும் நைசாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு நாண் ஸ்டிக் பேனில் இரண்டு மேசைக்கரண்டி நெய் போட்டு உருக்கவும்.

விழுதை அரைத்ததும், சர்க்கரையை ஏலக்காய் விதையுடன் அரைத்துக் கொள்ளவும். இதனால் சாப்பிடும் போது ஏலக்காய் வாயில் தட்டுப்படாது.

பின் அரைத்த விழுதை பேனில் போடவும்.

கை எடுக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் அடிப்பிடித்து அல்வாவின் வாசத்தையே மாற்றிவிடும். மீண்டும் சிறிது நெய் சேர்க்கவும்.

இப்போது சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

கொஞ்சம் நெய் வெளிவிட தொடங்கும் போது கலரை சேர்த்து கலக்கவும்.

நன்கு பேனில் ஒட்டாத பதம் வர வேண்டும். தேவையான நெய் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

அல்வாவில் நெய் சிறிது பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: