பாசி பருப்பு உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு - 1 கப்

சர்க்கரை - 3/4 கப்

முந்திரி பருப்பு - 10

உலர்ந்த திராட்சை - 10

நெய் - 1 கப்

செய்முறை:

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி பாசி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.

ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்.

பொடித்ததை சலித்து வைக்கவும்.

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

பின் அனைத்தையும் ஒன்று சேர்க்கவும்.

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரி, உலர்ந்ததிராட்சையை வறுத்து எடுக்கவும்.

மீதியுள்ள நெய்யை காய்ச்சி அப்படியே சூடாக கொஞ்சம் கொஞ்சமாக மாவுக்கலவையில் ஊற்றி முந்திரி, திராட்சையை போட்டு சிறிய உருண்டையாக பிடிக்கவும்.

குறிப்புகள்: