பாசிப்பருப்பு பணியாரம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு படி (8 ஆழாக்கு)

பாசிப்பருப்பு - 2 ஆழாக்கு

வெல்லம் - 3/4 கிலோ அல்லது 750 கிராம் அல்லது 800 கிராம்

எண்ணெய் - 3/4 லிட்டர்

செய்முறை:

பச்சரிசியை கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் வீட்டுக்குள்ளே உலர்த்தி இடித்துக்கொள்ள வேண்டும். அல்லது ஈர அரிசி அரைக்கும் மிஷினில் கொடுத்து அரைக்க வேண்டும்.

வெல்லத்தை தட்டி மூழ்குமளவிற்கு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி மாவில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

மறுநாள் பாசிப்பருப்பை வறுத்து அவித்துக்கொள்ள வேண்டும். மாவில் பருப்பை சேர்த்து கரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் ஒரு குழிக்கரண்டியில் மாவை ஊற்றி, வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: