பாசிப்பருப்பு பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 100 கிராம்

தேங்காய் துருவல் - அரை மூடி

வெல்லம் - 50 கிராம்

எண்ணெய் - 2 கப்

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தை பொடி செய்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

பாசிபருப்பு ஊறியதும் அதிலுள்ள தண்ணீரை நன்கு வடித்து எடுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைக்கவும்.

இந்த கலவையுடன் பொடி செய்து வைத்திருக்கும் வெல்லத்தையும் போட்டு நன்கு அரைக்கவும். விருப்பட்டால் அரைக்கும் மாவில் இரண்டு ஏலக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த மாவை ஒரு குழிக்கரண்டி எடுத்து ஊற்றவும்.

இதைப்போல் 3 அல்லது 4 ஊற்றி நான்கு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: