பாசிப்பருப்பு அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 1/4 கப்

சர்க்கரை - 4 கப்

நெய் - 1 கப்

முந்திரிப்பருப்பு - 10

திராட்சை - 8

ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரம் நன்கு ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஊறிய பாசிப்பருப்பை ஒரு மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகாய் காய்த்து எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினைப் போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

பாசிப்பருப்பு நன்கு பொன்னிறமாய் வரும்வரை கிளறி, வெந்தபின் அதில் காய்த்து வைத்துள்ள சர்க்கரை பாகினை ஊற்றி கிளற வேண்டும்.

நன்கு கிளறிய பின், நெய் மேலெழுந்து வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: