பாசிப்பருப்பு அல்வா
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
பால் - தேவைக்கு
நெய் - 1/2 அல்லது 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் தூள் - தேவையான அளவு
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வாசம் வர வறுக்கவும். இதை நன்றாக ஆற விட்டு நீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பருப்பை தேவையான அளவு பால் விட்டு நைசாக அரைக்கவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு சூடாகும் முன் கலவையை ஊற்றி பின் அடுப்பில் வைத்து கிளறவும். கலவை சிறிது கெட்டியாக துவங்கியதும் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும்.
நெய் முழுவதுமாக உள்ளிழுத்து மீண்டும் வெளி வர ஆரம்பிக்கும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும்.
சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எடுக்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி விரும்பிய வடிவத்தில் கட் செய்யலாம்.
பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா கூட தூவி பரிமாறலாம்.
குறிப்புகள்:
பருப்பை வறுக்காமலும் ஊற வைத்து அரைக்கலாம். அப்படி செய்தால் முதலில் நெய் இல்லாமல் கலவையை சற்று வேக விட்டு பின் நெய் சேர்க்க வேண்டும். அரைக்க பால் கட்டாயமில்லை. சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும் என்பதால் சேர்த்திருக்கிறேன். சூடான கடாயில் கலவையை சேர்த்தால் உடனே சிறிது சிறிதாக கட்டி தட்டி விடும். அதனால் கலவையில் சிறிது நெய் விட்டு கலந்து பின் சிறுந்தீயில் வைத்து கை விடாமல் கிளற வேண்டும். எப்படியும் செய்து முடிக்க 45 நிமிடங்கள், ஒரு மணி நேரம் ஆகும். நெய் அதிகமாக பிடிக்கும். நெய் அளவை குறைத்தாலும் பார்க்க ட்ரையாக இருக்கும் அல்வா. ஆனால் சுவை நன்றாகவே இருக்கும். இந்த அல்வா பார்க்க கேசரி போலவே இருக்கும், ஆனால் மிகுந்த சுவையாக இருக்கும்.