பாசிபயறு லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைத்த பாசிபருப்பு மாவு - 3 கப்

சீனி மாவு - 6 கப் (பாசிபருப்பு மாவைவிட 1 மடங்கு கூடுதலாக)

நெய் - தேவையான அளவு

முந்திரி, ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பாசிபருப்பு மாவையும் சீனி மாவையும் நன்கு கலந்து கொள்ளவும்

பின் முந்திரி, ஏலக்காய் பொன் நிறமாக வறுத்து மாவில் போட்டு பரவலாக கிளறவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தேவையான நெய் ஊற்றவும். நன்கு சூடானதும் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

நெய் ரொம்ப சூடாகினால் கருகி விடும். அதனால் நல்ல வாசம் வரும் வரை சூடாக்கி கவனமாக கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சர்க்கரை நோயாளிகள் சீனி மாவுக்கு பதிலாக பனங்கல்கண்டு பொடி சேர்த்து செய்து சாப்பிடலாம்.