பழ போளி
தேவையான பொருட்கள்:
மைதா - 100 கிராம்
பேரீச்சம் பழம் - 100 கிராம்
செர்ரி பழம் - 100 கிராம்
நெய் - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 12
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
மைதா மாவுடன் உப்பு சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு தளரப் பிசைந்து ஒரு கப்பில் வைத்துக் கொள்ளவும்.
செர்ரி, பேரிச்சை துண்டுகளை மிக்ஸியில் அரைத்து அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு துண்டுகளை கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாழையிலை துண்டில் சிறிதளவு நெய் தடவி அதில் சிறிது மைதா மாவை வைத்து தோசைப் போல் தட்டி விரித்துக் கொள்ளவும்.
அதில் பழத்தில் தயார் செய்த அந்த பூரணத்தை நடுவில் வைத்து எல்லா பக்கமும் மைதா மாவை மூடவும்.
பிறகு மறுபடியும் நன்றாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தயார் செய்த போளியை அதில் போட்டு தோசைப் போல் இருபுறமும் புரட்டி சிறிது நெய் விட்டு வேகவைக்கவும். வெந்ததும் எடுத்து, தட்டில் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.