பலாப்பழ பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பலாச்சுளைகள் - 8 அல்லது 10

மைதா - 3/4 கப்

ரவை - 1/2 கப்

சர்க்கரை - சுவைக்கேற்ப

ஏலக்காய் தூள் - சிறிது

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

நெய் - தேவைக்கு

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

பலாச்சுளைகளுடன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.

மைதாவுடன் ரவையைக் கலந்து கொள்ளவும்.

அதனுடன் சோடா உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதைச் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நன்றாக கலந்துவிடவும். (தேவைப்பட்டால் மீண்டும் நீர் சேர்த்து கலக்கவும்).

சூடான பணியாரக் கல்லில் நெய் விட்டு மாவை ஊற்றி வேகவிடவும். சிவந்ததும் திருப்பி போட்டு மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

ரவை சேர்ப்பதால் நீரை இழுத்துக்கொள்ளும். அதனால் பணியார மாவு பதத்திற்கு தேவைப்படும் நீரை ஊறிய பிறகும் சேர்த்து சரிசெய்யலாம்.

இந்தக் கலவையை கடாயில் நெய் / எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரண்டியால் எடுத்து ஊற்றி பொரித்தும் எடுக்கலாம். பணியாரமாக செய்யும்போது எண்ணெய் குறைவாக இருக்கும். பலாப்பழத்தின் இனிப்பிற்கேற்ப சரிபார்த்து சர்க்கரையைச் சேர்க்கவும்.

இதில் வெல்லத்தையும் துருவிச் சேர்க்கலாம்.