பலாப்பழ கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பலாப்பழ சுளைகள் - 2 கப்

சர்க்கரை - 2 கப்

தேங்காய் துருவல் - 2 கப்

நெய் - 200 கிராம்

முந்திரி - 5

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.

சர்க்கரை கரைந்து கொதிக்கும் போது, நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு கிளறி கொண்டே இருக்கவும்.

சிறிது நேரம் கழித்து, தேங்காய் துருவலைப் போட்டு கிளறவும்.

நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும்.

கெட்டியாக இறுகி வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாக பரப்பி, ஆறிய பின் வில்லைகளாக வெட்டவும்.

குறிப்புகள்: