பலாப்பழ அப்பம்
0
தேவையான பொருட்கள்:
பலாச்சுளை - 10
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை சுத்தமான துணியில் ஈரம் போக உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும்.
பலாச்சுளைகளை கொட்டை நீக்கி மிக்ஸியில் வெல்லத்துடன் சேர்த்து அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்.
அரைந்ததும் பொடித்த அரிசியை சேர்த்து நன்றாக அரைக்கவும். மாவுடன் நெய் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். கரண்டியால் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி பொரிக்கவும்.
நல்ல சிவந்த நிறம் வந்ததும் எண்ணெயிலிருந்து எடுத்து வடிக்கவும்.
குறிப்புகள்:
குழிப்பணியார சட்டியிலும் செய்யலாம்.
வெல்லம் - பலாப்பழத்தின் இனிப்பை பொறுத்து கூட்டவோ குறைக்கவோ செய்யவும்