பரங்கி முந்திரி பாயசம்
தேவையான பொருட்கள்:
நறுக்கின பரங்கிக்காய் துண்டுகள் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 10
பால் - 3 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
ஜாதிக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கின பிஸ்தா - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கின சாரப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
10 முந்திரிபருப்பையும் தனியே ஊற வைத்துக் கொள்ளவும். நறுக்கின பரங்கிக்காய் துண்டுகளை ஆவியில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
ஆறின பின் ஊறவைத்த முந்திரிப் பருப்புடன் சேர்த்து நைசாக அரைக்கவும். இதை பாலில் சேர்த்துக் கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து அடுப்பைச் சின்னது பண்ணி சர்க்கரை கரைந்தவுடன் இறக்கி விடவும்.
இதை மிகவும் கவனமாகப் பண்ணவேண்டும். பால் மிகவும் கொதித்தால் திரிய வாய்ப்பு உண்டு.
சர்க்கரை கரைந்ததும், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி போட்டுக் கலந்து இறக்கவும்.
பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்பு, பிஸ்தா, சாரைப்பருப்பு முதலியவற்றைத் தூவவும். நைவேத்தியம் செய்தபின், குளிரவைத்துப் பரிமாறவும்.