பரங்கிவிதை பாயாசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பரங்கி விதை - 1 கப்

சீனி - 1 1/2 கப்

பால் - 1/2 லிட்டர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பரங்கிவிதையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து 2 முறை அலசிக் கொள்ளவும்.

மிக்ஸியில் போட்டு பால் அரை கப் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மீதியுள்ள பாலை ஊற்றி, சீனி சேர்த்து நன்கு கலக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கரண்டியை வைத்து கிளறாமல் கொதிக்க விடவும். கொதித்து பொங்கி வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: