பரங்கிப்பழ கேசரி
தேவையான பொருட்கள்:
பரங்கிப் பழம் - ஒரு துண்டு
ரவா - 100 கிராம்
சீனி - 150 கிராம்
ஏலக்காய் - 5
நெய் - 50 கிராம்
திராட்சை - 25 கிராம்
முந்திரி - 25 கிராம்
கேசரி பவுடர் - 10 கிராம்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
பரங்கிப்பழத்தை தோலை சீவி, சிறிதாக துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ரவாவை இட்டு வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதி வந்ததும் துருவிய பரங்கிப்பழத்தை அதில் போட்டு நன்கு வேக வைக்கவும்.
அது நன்கு குழைந்தவுடன் வதக்கிய ரவாவையும் சேர்த்து வேக வைக்கவும்.
ரவா வெந்தவுடன் சீனி, ஏலக்காய், திராட்சை, முந்திரி ஆகியவற்றை சேர்க்கவும்.
பிறகு கேசரி பவுடரை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும். அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும். கேசரிப் பவுடர் நன்கு கலந்து, கேசரியானது பதமாய் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.