பயற்றம் பணியாரம்
தேவையான பொருட்கள்:
பயறு - 500 கிராம்
சீனி - 500 கிராம்
பச்சை அரிசி - 1/2 கப்
தேங்காய்ப்பூ - 500 கிராம்
மிளகுதூள் - 3 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - 2 தேக்கரண்டி
மைதாமா - 1/2 கப்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பயற்றை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பச்சை அரிசியை 3 மணி நேரம் ஊற விடவும்.
அரிசி கழுவும் போது பயற்றையும் சேர்த்து கழுவி நீரை நன்றாக வடிய விடவும்.
பின்பு வடித்த அரிசி பயறை அரைத்து சலித்து மாவை எடுக்கவும்.
அந்த மாவுடன் சீனியைக் கலந்து அமத்தி மூடி வைக்கவும்.
தேங்காய்ப்பூவை வறுக்கவும்.
ஆறிய பின்பு அரைத்து எடுத்து மா சீனிக் கலவையுடன் கலக்க வேண்டும்.
அத்துடன் ஏலக்காய்த்தூள், மிளகுதூள் சேர்த்து கலக்க வேண்டும்.
பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
மைதாமாவுடன் உப்பு, மஞ்சள் கலந்து தண்ணீர் விட்டு தோசைமா பதத்திற்கு கரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் உருட்டி வைத்த
உருண்டைகளை மைதாவில் முக்கி எடுத்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.