பயற்றம்பருப்புப் பாயசம் (1)
0
தேவையான பொருட்கள்:
பயற்றம் பருப்பு - ஒரு ஆழாக்கு
சர்க்கரை - 2 ஆழாக்கு
பால் - 2 கப்
சேமியா - 200 கிராம்
முந்திரிப் பருப்பு - 20
துருவிய தேங்காய் - 10 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 8
நெய் - சிறிது
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றிப் பயற்றம் பருப்பு, முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து, அதில் பருப்பை மட்டும் நீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பருப்பைப் போடவும்.
பிறகு முக்கால் அளவு வெந்ததும், சேமியாவை தூளாக்கி போட்டு அதனுடன் சர்க்கரையைப் போடவும்.
இப்பொழுது பாத்திரத்தை இறக்கி வைத்து கொதிக்க வைத்து ஆறிய பாலை ஊற்றி அதனுடன் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய்த் தூளை சேர்த்துக் கிளறவும்.
இறுதியாக தேங்காய்த் துருவலைப் போட்டுக் கலக்கி பரிமாறவும்.