பன் ஸ்வீட்
தேவையான பொருட்கள்:
ப்ரெட் துண்டுகள் - 10
சீனி - 1 1/2 கப் (சுமார் 350 மில்லி)
தண்ணீர் - 1 1/2 கப்
டின் பால் - 3 அல்லது 4 மேசைக்கரண்டி
பசு நெய் - 1 மேசைக்கரண்டி
கரூர் நெய் - 50 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
ரோஜா பன்னீர் - 1/2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10
செய்முறை:
முதலில் ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி நீக்கிவிட்டு, (பொரித்தெடுக்க வசதியாக) இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
சீனியை கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரைவிட்டு சற்று பிசுபிசுப்பான பதம் வரை பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
வாணலியில் பசு நெய்யை விட்டு முந்திரிப்பருப்புகளை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் கரூர் நெய்யும் எண்ணெயும் சேர்த்து, ப்ரெட் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறத்தில் வறுத்து, சீனி பாகில் போட்டு மூழ்க வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
இப்படியே எல்லா ப்ரெட் துண்டுகளையும் வறுத்து, பாகில் போட்டு எடுத்த பிறகு, மீதமுள்ள பாகில் டின் பால், பன்னீர், வறுத்த முந்திரி பருப்புகள், ஊறிய ப்ரெட் துண்டுகள் அனைத்தையும் சேர்த்து குழைந்து விடாத அளவு மெதுவாக பிரட்டி எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இது கிச்சடி மற்றும் பிரியாணிக்கு ஒரு நல்ல சைட் டிஷ்.