பனங்காய் பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
பனம்பழச்சாறு - 250 மில்லி
பச்சரிசி மாவு - 250 கிராம்
ஏலக்காய் பவுடர் - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 250 மில்லி
சர்க்கரை - 250 கிராம்
செய்முறை:
பாத்திரத்தில் பனம் பழச்சாறு, அரிசி மாவு, ஏலக்காய் பவுடர், சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து இட்லி மாவு பதம் வரும் வரை கிளறி மூன்று மணிநேரம் ஊற விடவும்.
பிறகு பணியார சட்டியை அடுப்பில் வைத்து மிதமாக எரிய விட்டு சற்று நேரம் காயவிடவும்.
ஒவ்வொரு குழியிலும் கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு சின்ன குழி கரண்டியால் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி வேகவிடவும்.
பொன்னிறமாக வந்ததும், பணியாரம் திருப்பி விடும் ஊசியால் திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.