நொய் பாயசம்
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பால் - 2 லிட்டர்
நொய் அரிசி - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரி - 10
உலர்ந்த திராட்சை - 20
ஏலக்காய் - 5
ஜாதிக்காய் - 1/4 துண்டு
தேங்காய் - 1
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துப் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பின்னர் நொய்யைக் கழுவிக் களைந்து அதில் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
நொய் வெந்தபிறகு சர்க்கரை சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
பொடித்த ஏலக்காய், ஜாதிக்காய், காய்ந்த திராட்சை, முந்திரி, தேங்காய்த் துருவல், குங்குமப்பூ சேர்த்துக் கல்க்கி பரிமாறவும்.