நேந்திர பழ பாயசம்
0
தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழம் - 2
தேங்காய் - 1 மூடி
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
நெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை:
நேந்திரம் பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என எடுக்கவும்.
நேந்திரம் பழத்தை நெய்யில் வதக்கி, மூன்றாம் பாலை விட்டு பழம் நன்றாக வேகவிடவும்.
வெல்லத்தை தூள் செய்து, 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி வெந்த பழத்துடன் சேர்க்கவும்.
10 நிமிடம் கழித்து இரண்டாம் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து, முதல் தேங்காய் பாலையும் சேர்த்து கலக்கி பரிமாறவும்.