நேந்திரம்பழ இனிப்பு உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நேந்திரம்பழங்கள் - 3

முட்டை- 3

சீனி - 3 மேசைக்கரண்டி

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

நெய் - 3 மேசைக்கரண்டி

பொடியாக உடைத்த முந்திரி பருப்பு - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் அல்லது நெய் - பொரிப்பதற்கு தேவையான

செய்முறை:

நேந்திரம்பழங்கள் முழுவதுமாக பழுத்திருக்கக்கூடாது. செம்பழமாக இருக்க வேண்டும்.

அவற்றை ஆவியில் வேக வைக்கவும். sஆறியதும் துளி உப்பு சேர்த்து அவற்றை அரைத்து மாவு போல பிசைந்து கொள்ளவும்.

முட்டைகளை உடைத்து அவற்றில் ஏலம், சீனி கலந்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

நெய்யை ஒரு வாணலியில் சூடு செய்து முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

பிறகு அதே நெய்யில் முட்டைக் கலவையை ஊற்றி அவை உதிரி உதிரியாக வரும்வரை கிளறி எடுத்து முந்திரிப்பருப்பை கலந்து வைத்துக் கொள்ளவும்.

நேந்திரம்பழ மாவை எடுத்து சிறிய உருண்டைகள் செய்யவும்.

ஒவ்வொரு உருண்டையையும் நெய்யைத்தொட்டுக் கொண்டு கிண்ணம் போல செய்து அதில் சிறிது முட்டைக் கலவையை வைத்து மூடவும்.

இதேபோல எல்லா உருண்டைகளையையும் செய்து அவற்றை நெய்யில் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: