நாட்டுச் சர்க்கரை பணியாரம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
நாட்டுச் சர்க்கரை - 2 கப்
தேங்காய் - 2 வில்லைகள் (நடுவிரல் அளவு)
ஏலக்காய் - 5
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
மிக்ஸியில் தேங்காயுடன் ஏலக்காயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஊறிய அரிசியை லேசாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். (தண்ணீரை ஊற்றி அரைக்க வேண்டாம்). அரிசி பாதி அரைபட்டதும் தேங்காய், ஏலக்காய் விழுதைச் சேர்த்து அரைக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி இரண்டு, மூன்று நிமிடங்கள் மட்டுமே வேகவிட்டு திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைப்பதால் மாவு நீர்க்கும் (இளகும்). அதனால் அரிசி அரைக்கும் போது தண்ணீர் அதிகம் தேவையில்லை.