தேங்காய் பால் பாயசம்
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 2 மூடி (துருவியது)
பச்சரிசி - 100 கிராம்
வெல்லம் - 1/4 கிலோ ( பொடி செய்தது)
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் துருவிய தேங்காயில் கெட்டியான பால் எடுக்கவும்.
மேலும் 2 முறை பால் எடுக்கவும். 2 பாலையும் தனித்தனியாக வைக்கவும்.
மூன்றாம் முறை எடுத்த பாலை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பால் கொதித்ததும் ,பச்சரிசியை சுத்தம் செய்து போடவும்.
அரிசி நன்றாக வெந்தபின் வெல்லத்தை போடவும்.
வெல்லம் கரைந்த பின் 2ம் முறை எடுத்த பாலை ஊற்றவும்
5 நிமிடம் கழித்து முதல் பாலை ஊற்றி 1/2 டீஸ்பூன் பொடி செய்த ஏலக்காய் தூளை போட்டு இறக்கி பரிமாறவும்.