தேங்காய் பர்பி (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 2

சீனி - 1 கிலோ

நெய் - 1/2 லிட்டர்

தேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்

கடலை மாவு - 100 கிராம்

பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்

ஏலக்காய் - 5

செய்முறை:

தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி சீனியை போட்டு காய்ச்சவும்.

பாகு கம்பி பதத்திற்கு வந்தவுடன் தேங்காய், பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு இவற்றை போடவும்.

அதில் நெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி பதம் வந்தவுடன் ஏலக்காய் போடவேண்டும்.

ஒரு தட்டில் நெய் தடவி அதில் கலவையை ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: