தேங்காய் சாக்லேட் லட்டு
0
தேவையான பொருட்கள்:
துருவிய சாக்லேட் - 1 கப்
கன்டென்ஸ்டு மில்க் - 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 1/2 கப்
பொடித்த வால்னட் - 1/4 கப்
பொடித்த பாதாம் - 1/2 கப்
செய்முறை:
சாக்லேட்'ஐ மைக்ரோவேவில் "ஹை"யில் 1 நிமிடம் வைத்து உருக்கவும்.
பின் இதை எடுத்து கரண்டியால் நன்றாக அடித்து ஸ்மூத் ஆக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தேங்காய் துருவல், வால்னட் பொடி, பாதாம் பொடி கலந்து கொள்ளவும்.
இத்துடன் அடித்த சாக்லேட், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து, மீதம் இருக்கும் தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து பரிமாறவும்.