தேங்காய்ப் பால் கோவா
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - ஒரு கப்
ஊறவைத்த பயத்தம் பருப்பு - அரை கப்
ஊறவைத்த பச்சரிசி - கால் கப்
துருவிய வெல்லம் - ஒன்றரை கப்
ஏலக்காய் - 5
முந்திரிப் பருப்பு - 20 கிராம்
நெய் - 50 கிராம்
செய்முறை:
தேங்காய்த் துருவல், பயத்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை மாவாக அரைத்து எடுக்கவும்.
துருவிய வெல்லத்தை மாவில் போட்டு நன்கு கலந்து விடவும்.
ஒரு கடாயில் இந்த மாவை ஊற்றி கெட்டியாக, சிவந்து வரும் வரை தொடர்ந்து கிளறவும்.
சிவந்த நிறமாக வந்ததும் அதில் நெய், ஏலக்காய்ப் பொடி போட்டு கிளறவும். கிளறியவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
கடாயில் நெய் விட்டு முந்திரியை பொரித்து எடுத்து தேங்காய்ப் பால் கோவாவில் பதிக்கவும். ஆறியவுடன் பரிமாறவும்.