தேங்காய்ப்பால் ரவா கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
கட்டியான தேங்காய்ப்பால் - 2 கப்
தண்ணீர் - 1 கப்
சீனி - 1 1/2 - 1 3/4 கப்
நெய் - 1 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 10 (பாதியாக உடைத்துக்கொள்ளவும்)
சிவப்பு கலர் - 1 சிட்டிகை
செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுத்து வைக்கவும்.
ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய்ப்பாலை கேசரி கிண்டும் பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.
அது சூடானதும் வறுத்து வைத்துள்ள ரவை கொட்டி கிளறிவிடவும். அது கொதிவரும் போது அடுத்து மீதியுள்ள 1 கப் தேங்காய்ப்பாலை ஊற்றவும். அதனோடு வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பையும் சேர்த்து கிளறவும்.
பிறகு கலர் சேர்க்கவும், ரவை வெந்ததும் சீனியை கொட்டி நன்றாக கிளறிவிடவும். எல்லாமும் சேர்ந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.