தேங்காய்ப்பால் பாயாசம்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/2

வறுத்த பச்சரிசி மாவு / இடியாப்ப மாவு - 2 தேக்கரண்டி

வெல்லம் - 3 துண்டு

நெய் - ஒரு தேக்கரண்டி

தேங்காய் பால் - 1/4 கப்

ஏலக்காய் - 3

செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி அரைத்து பாலெடுத்து வைக்கவும். முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என எடுத்து வைக்கவும்.

முதல் பால் கொஞ்சமாக எடுத்து அதனுடன் கட்டியில்லாமல் அரிசி மாவை கரைத்து வைக்கவும்.

பின்பு ஏலக்காய், வெல்லம், முதல் பால் முழுவதையும் அதனுடன் கரைத்து கொதிக்க விடவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க கெட்டியாக தொடங்கும்.

இப்பொழுது இரண்டாம் பாலையும் ஊற்றி கிளறிக் கொண்டே இருந்தால் அதுவும் கெட்டியாகும். கடைசியாக முதல் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

நெய்யில் கொத்திய தேங்காய் பல்லை சிவக்க வறுத்து பாயாசத்தில் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: