துருவிய கேரட் ஹல்வா
தேவையான பொருட்கள்:
கேரட் - 1 1/2 கிலோ
சர்க்கரை - 500 கிராம்
நெய் - 200 மில்லி
ஆரஞ்சு ரெட் கலர் - 2 பின்ச்
பால் - 250 மில்லி
ப்ரெட் - 50 கிராம்
பாதாம் - 10 பருப்பு
முந்திரிப் பருப்பு - 15
செய்முறை:
கேரட் முழுவதையும் துருவிக்கொள்ளவும். துருவிய கேரட்டை குக்கரில் (5 அல்லது 7 லிட்டர் குக்கர்), குறிப்பிட்ட அளவு பால் விட்டு 1 -2 விசில் வைத்து எடுக்கவும். ப்ரெட்டை மிக்ஸியில் தூள் செய்து கொள்ளவும்.
பின்பு நன்றாக பால் வற்றவிட்டு சர்க்கரையை சேர்க்கவும். ப்ரெட்டை தூள் செய்து சேர்க்கவும். அடுத்து 150 மில்லி நெய் சேர்த்து கிண்டவும். 2 பின்ச் கலர் சேர்க்கவும். செர்விங் பவுளில் கொட்டி ஆறவிடவும்.
பாதாம் பருப்பை சுடுநீரில் ஊறவைக்கவும். பின்பு தோலெடுத்து நீளவாக்கில் மெல்லியதாக கட்பண்ணவும்.
முழு முந்திரியை பாதியாக பிளந்து மீதமுள்ள 50 மில்லி நெய்யில் வறுத்து பவுளில் உள்ள ஹல்வா மேல் கொட்டவும். கட் பண்ணிய பாதாம் பருப்பை துவி அலங்கரிக்கவும்.