திருவாதிரை களி (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
கடலைபருப்பு - 1/2 கப்
வெல்லம் - 2 கப்
நெய் - 3/4 கப்
ஏலக்காய் - 5
முந்திரி - 10
தண்ணீர் - 6 - 8 கப்
பொடியாக நறுக்கிய தேங்காய் - 3/4 கப்
உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
வாணலியில் பச்சரிசியை போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
வறுத்த பச்சரிசியை ரவை பதத்திற்கு பொடிக்கவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். கடலைபருப்பை வேக வைக்கவும்.
வெல்லத்தை கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைக்கவும்.
பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் வைத்து கொதித்ததும் உப்பு சேர்த்து, அரிசியை மெதுவாக கொட்டி கொண்டே சிறுதீயில் வைத்து கெட்டி தட்டாமல் கிளறவும்.
அரிசி நொய் வெந்ததும் வேக வைத்த கடலை பருப்பை அதில் சேர்க்கவும்.
அதன் பின்னர் பொடி செய்த ஏலக்காய் தூளினை சேர்க்கவும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து களியுடன் சேர்த்து கிளறவும்.
நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகள் சேர்த்து கலந்து விடவும்.
வெல்லத்தை வடிகட்டி களியுடன் ஊற்றி கிளறி சிறுதீயில் வைத்து 5 - 10 நிமிடம் மூடி வைக்கவும்.
மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து நன்றாக கலந்து களி பதம் வந்ததும் எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
நொய் வேகும்போது 2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து பக்கத்திலேயே சூடாக தயாராக வைத்திருக்கவும்.
சில அரிசி வகைகள் பொடிக்கும் போது, நிறைய மாவாகும். அப்படி மாவாக இருந்தால் தண்ணீர் 6 கப் போதாது, உடனே சூடான நீர் சேர்த்து கிளற தேவைப்படும்.
வெல்லம் விருப்பத்திற்கு ஏற்ப அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
செய்து முடித்த பின் இனிப்பு குறைவாக இருந்தாலும் சர்க்கரை சேர்த்து கிளறலாம்.