திருவாதிரை களி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

வெல்லம் - 1 1/2 கப்

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

பாசிப்பருப்பு - 1/4 கப்

தண்ணீர் - 2 1/2 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

முந்திரி, திராட்சை - 1 தேக்கரண்டி

ஏலக்காய் - 5

நெய் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை நன்றாக வறுத்து ஆறவிடவும்.

பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பைத் தனித்தனியாக வறுத்து, பிறகு வேகவைத்துக் கொள்ளவும். (கடலைப்பருப்பு வேக நேரம் அதிகமாகும் என்பதால் தனித்தனியாக வேக வைப்பதே நல்லது.)

அரிசி ஆறியதும் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.

அரிசி ரவையில் தண்ணீர் தெளித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை சுடுநீரில் கரைத்து வடிகட்டி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும் வெல்லப் பாகில் அரிசி ரவை, வேக வைத்த பருப்பு வகைகள் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு தேங்காய் துருவலைப் போட்டு கிளறவும்.

நன்கு கிளறிக் கொண்டே ஏலக்காய் தூளையும் சேர்க்கவும். நன்றாக வெந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான திருவாதிரை களி தயார்.

விருப்பப்பட்டால் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: