தினை கருப்பட்டி பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தினை - 1 கப்

பொடி செய்த கருப்பட்டி - 3/4 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

ஏலக்காய் - 5

செய்முறை:

தினையை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் கருப்பட்டி, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். (விரும்பினால் தேங்காயைச் சிறு துண்டுகளாகப் போடலாம். அரைக்கும் போது சற்று அரைபடாமல் இருக்கும். அதனால் சாப்பிடும் போது அவ்வப்போது வாயிற்கு தட்டுப்படும்).

பிறகு அரைத்தக் கலவையினை பணியாரக் கல்லில் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.

வெந்த்தும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தினை சிறு தானிய வகையைச் சார்ந்தது.