திடீர் பாயசம் (1)
0
தேவையான பொருட்கள்:
அவல் - 50 கிராம்
திக்கான பசும்பால் - 1 கப்
சீனி - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப
கிஸ்மிஸ் பழம் - தேவைக்கேற்ப
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை
செய்முறை:
அவலை தண்ணீரில் ஊற வைத்து விடவும்.
ஒரு பத்திரத்தில் பாலை ஊற்றி அதனுடன் ஊற வைத்த அவல், சீனி, ஏலப்பொடி கலந்து கொதிக்க வைக்கவும்.
பிறகு நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை பாலில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.