தக்காளி ஓட்ஸ் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி விழுது – 1 கப்

ஓட்ஸ் - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

மில்க்பவுடர் - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய்த்தூள் - சிட்டிகை

பிஸ்தாதுருவல் - 1/2 கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - சிட்டிகை

செய்முறை:

முதலில் தக்காளியை கொதிக்கும் நீரில் தோல் வெடிக்கும்வரை போடவும்

ஆறியதும் தோல் உரித்து விழுதாக மிக்ஸியில் அரைக்கவும்

ஓட்ஸை மூழ்கும்வரை நீர்விட்டு 10நிமிடம் ஊறவைக்கவும்

ஊறிய ஓட்ஸை வடிகட்டியில் பிழிந்து பால் எடுக்கவும்

சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்

பிஸ்தாவை தோல் உரித்து துருவி கொள்ளவும்

தக்காளிவிழுது,ஓட்ஸ்பால் 1டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து

5 நிமிடம் மைக்ரோஹையில் வைக்கவும்

இடையில் ஒருமுறை கிளறவும்

பின் அதனுடன் பால்பவுடர் சேர்த்து கலந்து மீண்டும் 5 நிமிடம்

மைக்ரோஹையில் வைக்கவும்

பிறகு வெளியில் எடுத்து கிளறி பொடித்த சர்க்கரை,உப்பு,ஏலக்காய்த்தூள்

மீதி நெய் ,பிஸ்தா துருவல் சேர்த்து கிளறி மீண்டும் 5நிமிடம்

மைக்ரோமீடியமில் வைக்கவும்

ஒவ்வொருமுறை வைக்கும்போதும் இடையில் எடுத்து கிளறி வைக்கவும்

பின் வெளியில் எடுத்து நன்கு கிளறி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டவும்

குறிப்புகள்: