டேட்ஸ் தேங்காய் லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டேட்ஸ் (பேரிச்ம் பழம்) - 15 அல்லது 20

உலர்ந்த தேங்காய் துருவல் - 3/4 அல்லது 1 கப்

கன்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

வெண்ணெயை ஒரு நான் ஸ்டிக்கில் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய டேட்ஸ் சேர்த்து வதக்கவும்.

டேட்ஸ் ஸாஃப்ட் ஆக ஆரம்பித்ததும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலந்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது எடுத்து ஆரியதும் லட்டுகளாக (உருண்டைகளாக) உருட்டவும்.

விரும்பினால் கடைசியாக வெறும் தேங்காய் துருவலில் உருண்டைகளை பிரட்டி எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: