டேட்ஸ் ஜவ்வரிசி பாயாசம்
0
தேவையான பொருட்கள்:
டேட்ஸ் (பேரீச்ச பழம்) - 10 விதை நீக்கி துண்டுகளாக்கியது
ஜவ்வரிசி - 1/2 கப் 20 நிமிடம் ஊறவைத்தது
பசும் பால் - 3 கப்
சர்க்கரை - 3 தேக்கரண்டி
ஏகக்காய் தூள் - 1 பின்ச்
சுக்கு தூள் - 1 பின்ச்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
செய்முறை:
துண்டுகளாக்கிய பேரீச்சம்பழத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்..பேரீச்சை இளகி இருக்கும்
இதில் ஜவ்வரிசி ஊறவைத்ததையும் பாலும் சேர்த்து காய்ச்சவும்
சும்மார் 10 நிமிடத்தில் அனைத்தும் வெந்து பாலுடன் கட்டியாக வரும்
தேவைக்கு சர்க்கரையும் பார்த்து சேர்த்து உப்பு 1 பின்ச் சுவைக்கு சேர்த்து விடவும்
தீயை அணைத்து விட்டு ஏலக்காய் மற்றும் சுக்கு பொடியை சேர்க்கவும்
நெய்யில் முந்திரி பருப்பை தாளித்து கொட்டி பரிமாறவும்.