டூப்ளிகேட் பாதாம் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4

சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1

பால் - 1/4 கப்

நெய் - 1/2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

பாதாம் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் தனித்தனியே வேக வைத்து உரித்து, மசித்து பால் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.

விழுது உள்ள அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் அரைத்த விழுது, சர்க்கரை, நெய் சேர்த்து சுருளக் கிளறவும்.

ஒட்டாமல் வரும் பதத்தில் பாதாம் எசென்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

அசல் பாதாம் அல்வா போலவே இருக்கும்.