ஜாங்கிரி (2)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுந்தம் பருப்பு - 1/4 கிலோ

ப.அரிசி - ஒரு பிடி

சீனி - 1/2 கிலோ

ஆரஞ்சு பவுடர் - சிறிது

ரோஸ் எஸன்ஸ் - சிறிது

ரீபைன்டு ஆயில் - 1/2 லிட்டர்

கனமான துணி - ஒரு சதுர அடி

செய்முறை:

முதலில் உ.பருப்பையும், ப.அரிசியையும் பதினைந்து நிமிடம் ஊற வைத்து அரைக்க வேன்டும்.

மாவு அரைக்கும் போதே சீனியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி அதனுடன் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

இப்போது வாயகன்ற அடி தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.

மாவு நன்கு அரைபட்டவுடன் ஆரஞ்சு கலர் பவுடர் சேர்த்து சிறிது சிறிதாக துனியில் வைத்து நேரடியாக எண்ணையில் பிழியவும்.

வெந்தவுடன் (முறுக கூடாது) சூடாக எடுத்து பாகில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெளியில் எடுத்து தட்டில் அடுக்கவும்.

குறிப்புகள்: