ஜவ்வரிசி பால் பாயாசம்
0
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1/4 கப்
சேமியா - 1/4 கப்
பால் - 1 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
முந்திரி பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 10
நெய் - 2 ஸ்பூன்
குங்குமப் பூ - 5
நசுக்கிய ஏலக்காய் - 3
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை இரவே ஊற வைக்கவேண்டும்.
மறுநாள் ஜவ்வரிசியை குக்கரில் வைத்து 6 விசில் வைத்து எடுக்கவும்.
சேமியாவை 1 கப் தண்ணீர்ல் வேகவைத்து எடுக்கவும்.
பாலை காய்ச்சவும்.
நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு சர்க்கரை சேர்த்து கிளறி ஜவ்வரிசி, சேமியாவை சேர்த்து கிளறி அடுப்பில வைக்கவும்.
பின் ஏலக்காயை போடவும்.
நெய்யில் முந்திரி, உலர்ந்த திராட்சையை போட்டு வறுத்து பாலில் கொட்டவும்.
அப்படியே கொதித்து வரும் போது மீதியுள்ள நெய் , குங்குமப்பூவை சேர்த்து கிளறி இறக்கி பறிமாறவும்.