ஜவ்வரிசி பாயாசம்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 200 கிராம்

சீனி- 250 கிராம்

தேங்காய்- 2 மூடி (துருவி பால் எடுக்கவும்

முந்திரிபருப்பு- 50 கிராம்

ஏலம்- 5

செய்முறை:

அடுப்பில் சட்டியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் அதில் ஜவ்வரிசியை போட்டு கைவிடாமல் கிளறவும் ஜவ்வரிசி வெந்ததும் தேங்காய்பால் ஊற்றி கிளறவும்.பின்பு சீனி சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்

முந்திரி,ஏலம் நெய்யில் வறுத்து போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: