ஜவ்வரிசி பாயசம் (1)
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1/4 கப்
பால் - 1 கப் அல்லது 1 1/2 கப்
நீர் - 1 கப்
முந்திரி, திராட்சை - தேவைக்கு
பாதாம், பிஸ்தா (விரும்பினால்)
நெய் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 1 - 2 விசில் வைத்து எடுக்கவும்.
பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும். பாலை நன்றாக திக்காக காய்ச்சி ஆற வைக்கவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து கண்ணாடி போல் இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்.
இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து எடுக்கவும்.
பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவி பரிமாறவும்.