ஜவ்வரிசி சேமியா பாயசம்

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கைப்பிடி

சேமியா - 1/2 கப்

பால் - 1 கப்

தண்ணீர் - 1 1/2 கப்

சர்க்கரை - 1கப்

ஏலக்காய்தூள் - 1/2 தேக்கரண்டி

முந்திரி, திராட்சை - 10

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஜவ்வரிசி போட்டு வேகவிடவும்.

ஜவ்வரிசி வெந்ததும் சேமியா போட்டு வேகவிடவும்.பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

சேமியா வெந்தவுடன் சர்க்கரை போடவும்.அடுப்பை சிம்மில்வைத்து கொதிக்கவிடவும்.இல்லையென்றால் பொங்கிவிடும்.

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி,திராட்சை வறுத்து பாயசத்தில் போடவும்.ஏலக்காய்தூள் போட்டு கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: