சோள லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீனி - 2 1/4 கப்

சோளம் - 1/2 கிலோ

முந்திரி - 25 கிராம்

செர்ரிபழம் - 25 கிராம்

ஆயில் - 1/4 கிலோ

நெய் - 50 கிராம்

செய்முறை:

சோளத்தை நைசாக அரைக்கவும். பிறகு காட்டன் துணியில் சலிக்கவும்.

சலித்த மாவுடன் 300 கிராம் தண்ணீர் ஊற்றி கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய்யை ஊற்றி 5 நிமிடம் சூடேற்றவும். பிறகு கரைத்த மாவுடன் நெய்யை கலந்து புளி வடிகட்டியினால் எண்ணெய்யில் ஊற்றவும்.

10 நிமிடம் வேக வைத்து அள்ளி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

அரை கிலோ சீனியுடன் 150 கிராம் தண்ணீர் சேர்த்து வாணலியில் 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

முந்திரி, செர்ரி, பூந்தி இவை மூன்றையும் காய்ச்சிய பாகில் கொட்டி கிளறி லட்டாக பிடித்து பரிமாறவும்.

குறிப்புகள்: