சோளப்பொரி உருண்டை
0
தேவையான பொருட்கள்:
பொப் கார்ன் (சோளப்பொரி) - 2 1/2 அல்லது 3 கப்
சீனி - 1 கப்
பிங்க் அல்லது சிவப்பு நிறம் - சிறிது
செய்முறை:
பொரியை Food Processorஇல் போட்டு 2 சுத்து ஓடவிட்டு உடைத்து எடுக்கவும். (அரைக்க வேண்டாம்)
சீனியில் பிங்க்/சிவப்பு நிறம் சேர்த்து கம்பி பாகிலும் சிறிது தடிப்பாக பாகு காய்ச்சவும்.
பின்னர் அதனுள் உடைத்த பொரியை கொட்டி நன்கு கிளறி சூடாக இருக்கும் போதே சிறிய டேபிள் டெனிஸ் பந்து அளவிற்கு உருண்டைகளாக உருட்டவும்.
இதனை காற்றுப் புகாதவாறு போத்தல்களில் அடைத்து வைத்து தேவையான போது எடுத்து சாப்பிடலாம்.