சோயா பீன்ஸ் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயாபீன்ஸ் - 350 கிராம்

சீனி - 6 1/4 கப்

ஏலக்காய் - 5

நெய் - 1/2 கப்

குங்குமப்பூ - 20 கிராம்

பன்னீர் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

சோயாபீன்ஸை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்துவிடவும்.

மறுநாள் காலையில் மேல்தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அல்லது உரலில் போட்டு அரைத்து, தண்ணீர் விட்டு பிசைந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

சீனியில் தகுந்த அளவு நீர் சேர்த்து கம்பிப் பாகாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு சோயாபீன்ஸ் பாலை அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சவும்.

நன்கு சுண்டி கூழாக வரும்போது, சீனிப்பாகையும், நெய்யையும் சிறிது சிறிதாக விட்டு தொடர்ந்து கிளறவும்.

பன்னீரில் குங்குமப்பூவைக் கரைத்து ஊற்றி கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் எடுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பவும்.

ஆறியபிறகு துண்டு போட்டுக் கொள்ளவும்.

குறிப்புகள்: