சோமாஸ் (1)
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப் (200 கிராம்)
முந்திரி - 50 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
பாதாம் - 5
சீனி - அரை கப் (5 தேக்கரண்டி)
தேங்காய்ப்பூ - 1/2 கப்
கசகசா - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 6
எண்ணெய் - 500 மில்லி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
மைதாவை உப்பு போட்டு பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். சீனியை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
பாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து உரித்து நான்காக நறுக்கவும். கசகசாவை சிறு தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சிறு தீயில் வறுத்து கடைசியாக தேங்காய்ப்பூ போட்டு வதக்கி கசகசாவுடன் ஆறவைக்கவும்.
பின் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து தூளாக்கிய ஏலக்காய், சீனி ஆகியவற்றை பிசறிக்கொள்ளவும்.
பிசைந்த மாவில் பெரிய எலுமிச்சையளவு எடுத்து சப்பாத்திக்கட்டையில் வைத்து தேய்த்து நடுவில் பொடித்த கலவையில் ஒரு தேக்கரண்டி அளவு வைத்து ஒரங்களில் தண்ணீர் வைத்து மடித்து சோமாஸ் கத்தியில் கட் பண்ணவும். (அ) ஒரங்களை கையால் வளைத்து டிசைன் பண்ணி எல்லாவற்றையும் எடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி சோமாஸை போட்டு பொரிக்கவும். நல்ல முறுகலாக பொரித்தவுடன் எடுத்து பரிமாறவும்.