சொக்லெட் புட்டிங்
0
தேவையான பொருட்கள்:
ரின் பால் - 1 ரின்
முட்டை - 4
கொக்கோ பவுடர் - 1 மேசைக்கரண்டி
வனிலா - 1 தேக்கரண்டி
சுடு தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முட்டையை நுரை வரக்கூடியதாக அடிக்கவும்.
கொக்கோப்பவுடரை 1/2கப் சுடு நீரில் கரைத்து வடிக்கவும்.
ரின் பாலுடன் அடித்த முட்டை, கொக்கோ, வனிலா இவற்றைக் கலந்து அடிக்கவும்.
எண்ணெய் பூசிய பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் அவித்தெடுக்கவும்.
அதன் பின் ஆறவைத்து 15 அல்லது 30 நிமிடங்கள் சாதாரன குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து, சிறு பாரிமாறும் பாத்திரத்திலிட்டு பரிமாறலாம்.